குடியாத்தம் அருகே வாகன சோதனையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குடியாத்தம் அருகே வாகன சோதனையின் போது 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் அருகே வாகன சோதனையில் 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

குடியாத்தம்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூசாரி வலசை கிராமம் அருகே கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் அருண் காந்தி, ராஜமாணிக்கம் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக பரதராமி நோக்கி வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் சிறுசிறு மூட்டைகளாக 5 டன் ரேஷன் அரிசி இருந்தது. ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் ரேஷன் அரிசி கடத்தி வந்த மினி லாரி டிரைவர் பேரணாம்பட்டு அடுத்த ஏரி குத்தி கிராமத்தைச் சேர்ந்த பழனி (வயது 35) என்பது வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.       

X

Daily Thanthi
www.dailythanthi.com