கஞ்சா விற்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

கஞ்சா விற்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கஞ்சா விற்ற பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Published on

சென்னை,

சென்னை அன்னை சத்யாநகரைச் சேர்ந்தவர் இருளாயி (வயது 49). கடந்த 2019-ம் ஆண்டு அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த இவரை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி திருமகள் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, இருளாயி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com