ரெயில் நிலையத்தில் கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

ரெயில் நிலையத்தில் கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது சென்னை சிறப்பு கோர்ட்டு.
ரெயில் நிலையத்தில் கஞ்சா விற்றவருக்கு 5 ஆண்டு ஜெயில்; சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
Published on

கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த 2018-ம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியை சேர்ந்த முரளி (வயது 40) என்பவர் கஞ்சா விற்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 18 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சி.திருமகள் முன்னிலையில் நடந்து வந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் கே.ஜே.சரவணன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த நீதிபதி, முரளி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com