கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

நெல்லை மாநகரில் 5 வாலிபர்கள், கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்தனர்.
கஞ்சா விற்பனை செய்த 5 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
Published on

திருநெல்வேலி மாநகரம், பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த மதிவாணன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 27), சுப்பிரமணியன் மகன் அருண்குமார்(25), அந்தோனி செலஸ்டின் செட்டி மகன் திமோராஜ்குட்டி(28), இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து(27), முருகன் மகன் முத்துகுமார்(எ) ரீகன்(24) ஆகிய 5 பேரும் நெல்லை மாநகர பகுதியில் கஞ்சா போதை பொருள் விற்பனை செய்து எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்த "மருந்து சரக்கு குற்றவாளிகள்" ஆவர்.

மேற்சொன்ன 5 பேரும் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவுப்படி இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com