5 ஆயிரம் கோடி சம்பாதிக்க நினைத்தார் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேச்சு

விஜய் மூலம் முதல்வராகி ரூ.5,000 கோடி சம்பாதிக்க பழனிசாமி நினைத்தார்; அதற்கு நான் விடவில்லை என்று செங்கோட்டையன் கூறினார்.
5 ஆயிரம் கோடி சம்பாதிக்க நினைத்தார் எடப்பாடி பழனிசாமி: செங்கோட்டையன் பேச்சு
Published on

அதிமுகவில் மூத்த நிர்வாகிகளில் ஒருவராக இருந்த செங்கோட்டையனுக்கும் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். கோபிசெட்டிபாளையம் தொகுதியில் இந்த முறை தவெக சார்பில் களமிறங்கியுள்ள செங்கோட்டையன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்

பிரசாரத்தின் போது இன்று செங்கோட்டையன் பேசியதாவது:
“முதல்வர், பொதுச்செயலாளர் பதவியை நான் விட்டுக்கொடுத்தது பழனிசாமிக்கு துரோகமாக தெரிகிறதா? என்னை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என கூறும் பழனிசாமிக்கு மக்களின் மனநிலை தெரியவில்லை. விஜய் மூலம் முதல்வராகி ரூ.5,000 கோடி சம்பாதிக்க பழனிசாமி நினைத்தார்; அதற்கு நான் விடவில்லை. விசில் சின்னத்தில் மக்கள் வாக்களிக்க தயாராக உள்ளனர்” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com