தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை 50 சிறப்பு பஸ்கள் இயக்கம்
Published on

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாம்பரம் ரெயில் நிலையத்தில் 17.11.2024 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் ரெயில்கள் பல்லாவரம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

எனவே, நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்துக் கழகம் தற்போது இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பஸ் நிலையத்திற்கு 10 பஸ்கள், தி.நகர் பஸ் நிலையத்திற்கு 20 பஸ்கள் மற்றும் பிராட்வே பஸ் நிலையத்திற்கு 20 பஸ்கள் என மொத்தம் 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com