மதுரையில் 50 ஆண்டு பழமையான கட்டடத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து...

மதுரையில் 50 ஆண்டு பழமையான கட்டடத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
மதுரையில் 50 ஆண்டு பழமையான கட்டடத்தை மீண்டும் புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்து...
Published on

மதுரை,

மதுரை மேல மாசி வீதியில் வாசுதேவன் என்பவருக்கு சொந்தமான பழமையான குடியிருப்பு ஒன்று இருக்கிறது. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள இன்று காலையிலிருந்து 10க்கும் மேற்பட்டோரை வைத்து வேலை நடந்து வந்தது.

இந்நிலையில் எதிர்ப்புறம் இருந்த கட்டடச் சுவர் தீடிரென இடிந்து விழுந்தது. இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 6 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கிய 3 பேரை உடனடியாக மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இடிபாடுகளில் எஞ்சியிருந்த 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் என்று தகவல் வெளியாகியுள்ளன. மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுப்பிக்கும் பணியின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com