ஸ்ரீவைகுண்டத்தில் 500 வாழைகள் வெட்டி சாய்ப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று முன்தினம் ஒரு கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில், அப்பகுதியில் நேற்று 500க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஸ்ரீவைகுண்டத்தில் 500 வாழைகள் வெட்டி சாய்ப்பு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
Published on

தூத்துக்குடி மாவட்டம், நவ்வலடியூரைச் சேந்த ஆறுமுகராஜா கடந்த 2015-ல் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் அருகே மர்ம நபாகளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டா. ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனா. தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கின் விசாரணை காலத்தில் துரைமுத்து என்பவர் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் இசக்கிமுத்து, தளவாய், சிவா(எ) சிவராமலிங்கம் ஆகிய 3 பேருக்கும் தலா 3 ஆயுள் தண்டனை, தலா ரூ.13 ஆயிரம் அபராதம், காசி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, ரூ.7 ஆயிரம் அபராதம், கொலை முயற்சி வழக்கில் கண்ணன் என்பவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று முன்தினம் (டிசம்பர் 24, புதன்கிழமை) தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நவ்வலடியூ பகுதியில் உள்ள ஆறுமுகராஜாவின் தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட வாழைகள் மர்ம நபாகளால் நேற்று (வியாழக்கிழமை) வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. இதுகுறித்து அவரது சகோதரர் இளையராஜா ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்தில் புகா அளித்துள்ளா. அதில், கொலை வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எங்களது உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளா. இதைத் தொடாந்து பாதிக்கப்பட்ட நபா வீட்டின் முன் 10-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com