

சென்னை,
தமிழ்நாட்டில் நாளை (மே 20, 2026) மருந்துக்கடைகள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 5,000 மருந்தகங்கள் திறந்திருக்கும் என மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசியதாவது;
”மக்களின் அவசர மற்றும் அன்றாட மருத்துவத் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், நாளை ஒரே நாளில் மட்டும் மாநிலம் முழுவதும் சுமார் 5,000 மருந்தகங்கள் (மெடிக்கல் ஷாப்புகள்) தடையின்றிச் செயல்படும். எந்தவொரு சூழ்நிலையிலும் மக்களுக்கு மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக உள்ளது. அதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டுள்ளது.”
இவ்வாறு அவர் கூறினார்.