பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு -டி.ஜி.பி. சங்கர்ஜிவால்

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு -டி.ஜி.பி. சங்கர்ஜிவால்
Published on

சென்னை,

டி.ஜி.பி. சங்கர்ஜிவால் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறி இருப்பதாவது:-

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரம் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். சொந்த ஊர்களுக்கு வாகனங்களில் பொதுமக்கள் செல்வதால், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் இடங்கள், கோவில்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலமாக இருக்கும். காணும் பொங்கல் அன்றும் பாதுகாப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com