54 மது பாட்டில்கள் பறிமுதல்

விருதுநகர் அருகே 54 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
54 மது பாட்டில்கள் பறிமுதல்
Published on

விருதுநகர் சாத்தூர் ரோடு சந்திப்பில் உள்ள ஒரு உணவகத்தின் அருகில் பெரிய தாதம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது 45), சிவகாசி கோபாலன்பட்டியை சேர்ந்த சுந்தர போஸ் (45) ஆகிய 2 பேரும் மது விற்பனை செய்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்பகுதியில் ரோந்து சென்ற இந்நகர் பஜார் போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 11 ஆயிரத்து 875 மதிப்புள்ள 54 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததுடன் அவர்கள் 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com