கோவில்பட்டியில் 54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: 2 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பல்லாக்கு ரோடு ஜங்ஷன் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
புகையிலை பொருட்கள் பறிமுதல், 2 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பகுதியில் 54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்து, அது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்லாக்கு ரோடு ஜங்ஷன் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை:

அந்த விசாரணையில் அந்த நபர்கள் கோவில்பட்டி வேலாயுதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது 42) மற்றும் கோவில்பட்டி ராஜீவ்நகரைச் சேர்ந்த முருகன்(62) என்பதும் அவர்கள் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட 54 கிலோ புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரியவந்தது.

54 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது:

இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து, சரவணன், முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 54 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com