தமிழகத்திற்கு இன்று 5,48 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை

தமிழகத்திற்கு மேலும் 5,48 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று கொண்டு வரப்பட உள்ளது.
தமிழகத்திற்கு இன்று 5,48 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவாகள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும், 2 கோடியே 99 லட்சத்து 25 ஆயிரத்து 810 கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்து உள்ளன. இதுவரை தமிழகத்தில் சுமார் 2 கோடியே 81 லட்சத்து 39 ஆயிரத்து 479 பேர் தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தமிழகத்திற்கு இன்று மேலும் 5,48,380 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் விமானத்தில் சென்னைக்கு மதியம் 12 மணியளவில் கொண்டு வரப்பட உள்ளது. சென்னைக்கு வர உள்ள தடுப்பூசிகள் மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களுக்கும் உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com