55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு


55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 23 Jun 2025 3:05 PM IST (Updated: 23 Jun 2025 3:18 PM IST)
t-max-icont-min-icon

நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை

தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசு பணியில் இருந்த ராஜேந்திர ரத்னூ தமிழக முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வணிகவரித்துறை செயலாளராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூடுதல் தலைமை செயலராக இருந்த விஜயகுமார் நிலச்சீர்த்திருத்த ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக சீர்திருத்தத்துறை அரசு செயலாளராக வள்ளலார் நியமிக்கப்பட்டுள்ளார்.

உயர்கல்வித்துறை செயலாளர் சமயமூர்த்தி மனிதவள மேலாண்மைத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு கலெக்டராக சினேகா நியமிக்கப்பட்டுள்ளார்..

சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித், ஊரக புத்தாக்க திட்ட தலைமை இயக்க அலுவலராக நியமினம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் , பெரம்பலூர் கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் ச்ன்கரா, நில அளவை, நிலவரத்திட்ட இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி கலெக்டர் பிரதீப் குமார், பேரூராட்சிகள் இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விருதுநகர் கலெக்டர் ஜெயசீலம் சென்னை மாநகராட்சி இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் கலெக்டர் உமா, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை கூடுதல் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பெரம்பலூர் கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவ், பேரிட மேலாண்மை கூடுதல் செயலாராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை கலெக்டர் சங்கீதா, சமூகநலத்துறை இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக 9 மாவட்ட கலெக்டர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

இது தொடர்பான முழு விவரம்:-

1 More update

Next Story