புழல் சிறையில் 58 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்

புழல் சிறையில் 58 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
புழல் சிறையில் 58 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்
Published on

செங்குன்றம்,

புழல் சிறையில் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகளும், விசாரணை சிறையில் 1,500-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 100-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் தமிழகம் முழுவதும் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. சிறை கைதிகளும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. அதன்படி புழல் சிறையில் தண்டனை சிறையில் இருந்து 39 பேரும், விசாரணை சிறையில் இருந்து 11 பேரும், பெண்கள் சிறையில் இருந்து 8 பெண்களும் என மொத்தம் 58 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com