வெளிநாடுகளில் இருந்து 58 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் சென்னை வந்தன

அமெரிக்கா, ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளில் இருந்து 58 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் விமானம் மூலம் சென்னை வந்தன.
வெளிநாடுகளில் இருந்து 58 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் சென்னை வந்தன
Published on

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி

இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் பெரும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.இதையடுத்து முதல்-அமைச்சா மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தமிழக அரசு ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிப்பதிலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை கொண்டு வருவதிலும் போக்கால அடிப்படையில் துரித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவிகளும் பெருமளவு தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள்

ஆக்சிஜன் கருவிகள் இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படுவதால் தனியார் ஆஸ்பத்திரிகள், தனியா அமைப்புகள் ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை அதிகாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய தொடங்கிவிட்டன.இந்தநிலையில் அமெரிக்கா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 52 ஆக்சிஜன் கருவிகள் சென்னை வந்து இறங்கின. தற்போது 2-வது முறையாக அமெரிக்கா, சீனா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து 58 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் 3 சரக்கு விமானங்களில் சென்னை வந்தன. சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் அடங்கிய பாசல்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக சுங்க சோதனைகள் முடித்து டெலிவரி கொடுத்து அனுப்பினா. அடுத்த சில நாட்களில் மேலும் பல கருவிகள் வெளிநாடுகளில் இருந்து வர இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com