நீலகிரியில் 5,82,352 வாக்காளர்கள்

நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 5,334 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.
நீலகிரியில் 5,82,352 வாக்காளர்கள்
Published on

ஊட்டி, 

நீலகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 5,334 பேர் நீக்கப்பட்டு உள்ளனர்.

வரைவு வாக்காளர் பட்டியல்

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி. 1.1.2023-ந் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சுருக்கமுறைத் திருத்தம் நேற்று முதல் வருகிற ஜனவரி 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில் நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. கலெக்டர் அம்ரித் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.

இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

ஊட்டி சட்டமன்ற தொகுதியில் 96,730 ஆண் வாக்காளர்கள், 1,05,483 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 7 பேர் என மொத்தம் 2,02,220 வாக்காளர்கள் இருக்கின்றனர். கூடலூர் (தனி) தொகுதியில் 92,378 ஆண் வாக்காளர்கள், 97,156 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 1,89,536 வாக்காளர்கள் உள்ளனர். குன்னூர் சட்டமன்ற தொகுதியில் 90,723 ஆண் வாக்காளர்கள், 99,869 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தனர் 4 பேர் என மொத்தம் 1,90,596 வாக்காளர்கள் உள்ளனர்.

5,334 பேர் நீக்கம்

நீலகிரி மாவட்டத்தில் 2,79,831 ஆண் வாக்காளர்கள், 3,02,508 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 13 பேர் என மொத்தம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளர்கள் இடம்பெற்று உள்ளனர். ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது 5,334 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். மேலும் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளின் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்டது.

1.1.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க 9.11.2022 முதல் 8.12.2022 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாவட்ட வருவலாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முகம்மது குதுரதுல்லா, ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, பூஷணகுமார், லோகநாதன், தேர்தல் தாசில்தார் புஷ்பாதேவி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com