

சென்னை,
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாக தலைநகர் சென்னையில் கொரோனா தொற்று பரவலின் வேகம் சற்று தணிந்துள்ளது. ஆனால், சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,881 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,45,859 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று 97 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,935 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் இன்று 5,778 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.