59 மின் திருட்டுகள் மற்றும் 11 மின் வீதிமீறல்கள் கண்டுபிடிப்பு - ரூ.68.81 லட்சம் வசூல்

பணம் செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
59 மின் திருட்டுகள் மற்றும் 11 மின் வீதிமீறல்கள் கண்டுபிடிப்பு - ரூ.68.81 லட்சம் வசூல்
Published on

சென்னை,

சென்னை மேற்கு, கோபி, தர்மபுரி, கோயம்புத்தூர் தெற்கு, உடுமலைப்பேட்டை, மேட்டூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் வேலூர் ஆகிய அனைத்து மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட கோட்டம் அளவிலான அதிரடி சோதனையின் போது 59 மின் திருட்டுகள் மற்றும் 11 மின் வீதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையாக ரூ.68.81 லட்சம் வசூல் செய்யப்பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

ரூ.68.81 லட்சம் வசூல்

சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி அமலாக்க கோட்ட பிரிவுக்கு உட்பட்ட சென்னை வடக்கு, சென்னை மேற்கு, சென்னை மையம், சென்னை தெற்கு, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வடக்கு, திருப்பூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர் மற்றும் விழுப்புரம் அமலாக்க உப கோட்டப் பிரிவுகளால் 01.06.2026 முதல் 15.06.2026 வரை உள்ள இடைப்பட்ட பல்வேறு நாட்களில் சென்னை மேற்கு, கோபி, தர்மபுரி, கோயம்புத்தூர் தெற்கு, உடுமலைப்பேட்டை, மேட்டூர், தூத்துக்குடி, திண்டுக்கல், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் வேலூர் ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் நடத்தப்பட்ட கோட்ட அளவிலான அதிரடி கூட்டு ஆய்வில் 59 மின்திருட்டுகள் மற்றும் 11 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு. இழப்பீட்டு தொகையாக சென்னை கோட்ட அமலாக்க பிரிவின் சார்பில் ரூ.15,77,917/- (பதினைந்து லட்சத்து எழுபத்து ஏழு ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினேழு ரூபாய் மட்டும்) விதிக்கப்பட்டது,

கோயம்புத்தூர் கோட்ட அமலாக்க பிரிவின் சார்பில் ரூ.26,71,288/- (இருபத்தாறு லட்சத்து எழுபத்தொன்று ஆயிரத்து இருநூற்று எண்பத்தெட்டு ரூபாய் மட்டும்) மற்றும் இதேபோன்று மதுரை அமலாக்க கோட்ட பிரிவின் சார்பில் ரூ.6,75,472/- ( ஆறு லட்சத்து எழுபத்து ஐந்து ஆயிரத்து நானூற்று எழுபத்திரண்டு ரூபாய் மட்டும்) மற்றும் திருச்சி அமலாக்க கோட்டம் சார்பில் ரூ.19,56,212/- (பத்தொன்பது லட்சத்து ஐம்பத்தாறு ஆயிரத்து இருநூற்று பன்னிரண்டு ரூபாய் மட்டும்) என ஆக மொத்தம் ரூ.68,80,889/- (அறுபத்து எட்டு லட்சத்து எண்பது ஆயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பது ரூபாய் மட்டும்) விதிக்கப்பட்டுள்ளது.

புகார்கள் தெரிவிக்கலாம்

மேலும் சம்பந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்து அதற்குரிய சமரசத் தொகையாக ரூ.3,40,000/-( மூன்று லட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் மட்டும்) செலுத்தியதால் அவர்கள் மீது காவல் நிலையத்தில் குற்றவியல் புகார் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

மின் திருட்டு தொடர்பான தகவல்களை செயற்பொறியாளர்/ அமலாக்கம்/ சென்னை கைபேசி 9445857591, கோவை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443049456, மதுரை அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443037508, திருச்சி அமலாக்கக் கோட்டப் பிரிவு 9443329851 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com