கும்பகோணத்தில் கூடுதலாக 6 பேருந்து சேவைகள் - தொடங்கி வைத்தார் அமைச்சர் ர.வினோத்

கும்பகோணம் அணைக்கரைக்கு கூடுதல் பேருந்து சேவையை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் ர.வினோத்
Published on

தஞ்சாவூர்,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

கூடுதல் பேருந்து

தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சரின் வழிக்காட்டுதலின் படியும், கும்பகோணம் 1 கிளை நகர் தடம் எண். A54 கும்பகோணம் அணைக்கரை (வழி) சோழபுரம் திருப்பனந்தாள் வரை கூடுதலாக 6 நடைகள் இயக்கப்படும் பேருந்து சேவையினை கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் இன்று (20-06-2026) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது.

கும்பகோணம் - அணைக்கரை

பொது மக்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பணிக்கு செல்லும் பெண்கள் ஆகியோரின் கோரிக்கைக்கு ஏற்ப கும்பகோணம் - அணைக்கரை வழித்தடத்தில் கூடுதல் நடைகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுரைக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றப்படும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல பொது மேலாளர் நடராஜன், வருவாய் கோட்டாட்சியர் வி.மூ.திருமலை, வட்டாட்சியர் பூங்கொடி, மாநகராட்சி ஆணையர் சுதா, துணை மேலாளர் (வணிகம்-கூட்டாண்மை) தமிழ்செல்வன், துணை மேலாளர் (வணிகம்) ராஜேஷ், உதவி மேலாளர் (தொ.நு) தண்டாயுதபாணி, உதவி மேலாளர் (வணிகம்- கூட்டாண்மை) ராஜ்மோகன், கும்பகோணம் 1 கிளை மேலாளர் சுரேஷ், உதவி பொறியாளர்கள் ராஜா, திருஞானசம்பந்தம் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com