கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி

மகளிர் சுயஉதவி குழுவினருக்கு கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் பெற்று தருவதாக ரூ.6 கோடி மோசடி
Published on

சென்னை கொளத்தூரை தலைமை இடமாக கொண்டு தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தை சென்னையை சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் நடத்தி வந்தார். அதில், கிரிஜா என்பவர் மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றினார். இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் கிளைகளை தொடங்கி சுயஉதவி குழுக்களுக்கு கடன் பெற்று தருவதாக அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, திண்டுக்கல் கிளை நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள் களப்பணியாற்றி மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கடன் பெற்று தருவதாக கூறி அதற்கான முன்பணமாக ரூ.6 கோடி வரை வசூலித்து, தொண்டு நிறுவனத்தின் உரிமையாளர், மக்கள் தொடர்பு அலுவலர் ஆகியோரின் வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு கடன் பெற்று தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திண்டுக்கல் கிளை ஊழியர்கள், திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் ஏசுதாஸ், கிரிஜா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com