ரூ.6¼ கோடியில் சாலை அமைக்கும் பணி

குடியாத்தத்தில் ரூ.6¼ கோடியில் சாலை அமைக்கும் பணியை அமலு விஜயன் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.
ரூ.6¼ கோடியில் சாலை அமைக்கும் பணி
Published on

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கூட்ரோடு பகுதியில் இருந்து அக்ராவரம் ஊராட்சி ரேணுகாபுரம் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 5.4 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.6 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் சாலையின் இருபுறமும் சுமார் 3 அடிகள் அகலப்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆர்.எஸ்.சம்பத்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கள்ளூர் ரவி, ஒன்றியக் குழு உறுப்பினர் மனோகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பெரும்பாடி விஸ்வநாதன், மூங்கப்பட்டு குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள், ஒப்பந்ததாரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com