சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு

சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
சிதம்பரம் அருகே படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்த 6 மீனவர்கள் மீட்பு
Published on

கடலூர், 

சிதம்பரம் அருகே கிள்ளை கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்து மகன் நாகராஜ் (வயது 35). இவருக்கு செந்தமான படகில் அதே பகுதியை சேர்ந்த ரூபன் (21), குணால் (20), விஷ்வா (23), எம்.ஜி.ஆர். திட்டு ஸ்டாலின் (41), சீர்காழி தொடுவாய் விஸ்வந்த் (18) ஆகிய 6 பேரும் கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் 23 நாட்டிகல் தூரம் சென்று கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, திடீரென படகு கவிழ்ந்தது. இதில் 6 பேரும் நடுக்கடலில் விழுந்து தத்தளித்தனர். இதை பார்த்ததும், அக்கம், பக்கத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் விரைந்து சென்று, கடலில் தத்தளித்த 6 பேரையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இது பற்றி கிள்ளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com