6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
6 ஐஏஎஸ் அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக பதவி உயர்வு
Published on

சென்னை,

உதயச்சந்திரன் உள்ளிட்ட 7 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் நேற்று பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்தந்லையில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 6 பேருக்கு, முதன்மைச் செயலாளர்களாக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தமிழகத்தில் முதல்முறையாக தேர்தலை நடத்தவுள்ள பெண் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 6 பேருக்கு முதன்மை செயலாளர்கள் அந்தஸ்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1.அர்ச்சனா பட்நாயக் ஐஏஎஸ் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

2. சிகி தாமஸ் வைதியன் ஐஏஎஸ் பேரழிவு மேலாண்மை ஆணையர்

3.சமயமூர்த்தி ஐஏஎஸ் மனித வள மேலாண்மை துறை செயலாளர்

4.எம்.எஸ் .சண்முகம் ஐஏஎஸ்- முதல்வரின் தனி செயலாளர்-2

5.ரீத்தா ஹரிஷ் தாக்கர் -ஐஏஎஸ் பொது மற்றும் மறுவாழ்வு துறை செயலாளர்

6.ஜெயஸ்ரீ முரளிதரன் ஐஏஎஸ் -சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறை செயலாளர்

ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com