காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 6 மாத குழந்தை மரணம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பகுதியைச் சேர்ந்த ஒருவரின் 6 மாத ஆண் குழந்தைக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது.
குழந்தை மரணம்
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை, நயினார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவருக்கு சதீஸ்வரன் என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு கடந்த திங்கட்கிழமை முதல் திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பெற்றோர் குழந்தையை உடனடியாக சிவகளை பகுதியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும், குழந்தையின் காய்ச்சல் குறையாமல் உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மேல் சிகிச்சைக்காக நேற்று (வியாழக்கிழமை) குழந்தையை திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்குள்ள குழந்தைகள் நலப் பிரிவு மருத்துவர்கள் குழுவினர் குழந்தைக்கு தீவிர கண்காணிப்பில் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இருப்பினும் மருத்துவர்களின் தீவிர முயற்சி பலன் தராமல், நேற்று மாலையில் அந்தக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவமனை தரப்பிலிருந்து ஏரல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், ஏரல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com