

பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே புதிய எருமை வெட்டிபாளையம் கிராமத்தில் செங்கல் சூளை உள்ளது. இங்கு புதுச்சேரியை சேர்ந்த 10 வயது சிறுமி பாம்பு கடித்து இறந்தார்.
இந்நிலையில் அவர் இறப்பதற்கு முன்பாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எருமை வெட்டிபாளையத்தை சேர்ந்த பாலு (வயது 75) என்ற முதியவர் அந்த சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் உள்பட அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பியதாக சதீஷ் (30), விஜயகுமார் (32), ரமேஷ் (30), கண்ணன் (30), பாஸ்கர் (24) உள்பட 6 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.