சென்னையில் மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது.
சென்னையில் மோசமான வானிலையால் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்
Published on: 

சென்னை,

சென்னையில் மோசமான வானிலை காரணமாக வானில் 6 விமானங்கள் வட்டமடித்தன.

வளிமண்டல சுழற்சி

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின்மே வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளின்மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

பரவலாக மழை

இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், சென்னை சென்டிரல், கிண்டி, வில்லிவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதேவேளை, மழையால் அலுவலகங்களில் இருந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பல்வேறு தரப்பினரும் அவதியடைந்தனர்.

மோசமான வானிலை

இந்நிலையில் சென்னையில் மோசமான வானிலை காரணமாக வானில் 6 விமானங்கள் தரையிரங்க முடியாமல் திணறின. இதனைத்தொடர்ந்து கொல்கத்தாவில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சிக்கும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோவைக்கும் திருப்பி விடப்பட்டன. டெல்லி, கொழும்பு, கோவையில் இருந்து வந்த விமானங்கள் வானிலை சீரானதும் தரையிறங்கின

X

Daily Thanthi
www.dailythanthi.com