ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு

சிறிய பையில் இருந்த 6 பவுன் நகையை ஓடும் பஸ்சில் மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 6 பவுன் நகை திருட்டு
Published on

சேலம்,

சேலம் கன்னங்குறிச்சி அருகேயுள்ள சின்னகொல்லப்பட்டி அண்ணாசாலை பகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய மனைவி மாணிக்கம் (வயது 60). இவர் சேலம் அழகாபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ கிளினிக்கில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 28-ந் தேதி கொண்டப்ப நாயக்கன்பட்டியில் உள்ள பொதுத்துறை வங்கிக்கு சென்று, தான் அடகு வைத்திருந்த 6 பவுன் நகையை மீட்டுள்ளார். மறுநாள் சூரமங்கலம் ஜங்ஷன் மெயின்ரோட்டில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி 5 ரோட்டிற்கு சென்றார். அப்போது அவர் வைத்திருந்த சிறிய பையில் இருந்த 6 பவுன் நகையை ஓடும் பஸ்சில் மர்ம நபர் திருடி சென்று விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com