கன்னியாகுமரியில் அதிக பாரம் ஏற்றி வந்த 6 லாரிகளுக்கு ரூ.2.1 லட்சம் அபராதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவர் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் தொடர் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றி வந்த 6 லாரிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கன்னியாகுமரி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






