சென்னை விமான நிலையத்தில் ரூ.60½ லட்சம் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.60 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 128 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.60½ லட்சம் தங்கம் பறிமுதல்
Published on

மீனம்பாக்கம்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.60 லட்சம் தங்கம்

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அவர், கால் மூட்டு வலி நிவாரணிக்காக போட்டு இருந்த பேண்ட்டேஜை கழற்றி பார்த்த போது அதில் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.60 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 128 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com