தூத்துக்குடியில் 600 கிராம் கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்: 3 வாலிபர்கள் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.
கஞ்சா பறிமுதல், 3 வாலிபர்கள் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் விற்பனைக்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பரும்பூர் பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பரும்பூர் பகுதியில் சந்தேகப்படும்படி 2 பைக்குகளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அதில் அவர்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்காக 600 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

600 கிராம் கஞ்சா, 2 பைக்குகள் பறிமுதல்; 3 வாலிபர்கள் கைது:

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் காவல் நிலைய இன்ஸ்பெகடர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஓட்டப்பிடாரம் நாகம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரபாண்டி மகன் மகேஷ்குமார் (வயது 19), வ.உ.சி.காலனி பகுதியை சேர்ந்தவர்களான ராசுக்குட்டி மகன் அறிவுமதி(எ) அழகு(23), பாஸ்(எ) பாலமுருகன்(22) ஆகிய 3 பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 600 கிராம் கஞ்சா மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com