வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
Published on

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com