பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் 'கிரெடிட் கார்டில்' ரூ.60 ஆயிரம் மோசடி

பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் ‘கிரெடிட் கார்டில்’ ரூ.60 ஆயிரம் மோசடியில் ஈடுப்பட்ட மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர் வருகின்றனர்.
பெரவள்ளூரில் ரெயில்வே பெண் என்ஜினீயரின் 'கிரெடிட் கார்டில்' ரூ.60 ஆயிரம் மோசடி
Published on

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவர், கேரளாவில் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக உள்ளார். இவருடைய மனைவி நிம்மி (வயது 33). ரெயில்வேயில் என்ஜினீயராக உள்ளார். தற்போது இவர், சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனியில் தங்கி, சென்டிரல் ரெயில் நிலையத்தில் உள்ள அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

நிம்மிக்கு கடந்த ஏப்ரல் மாதம் தனியார் வங்கி ஒன்று 'கிரெடிட் கார்டு' கொடுத்தது. அதை அவர் பயன்படுத்தாமல் வைத்திருந்தார். கடந்த மாதம் நிம்மியை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், தான் வங்கியில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் பயன்படுத்தாமல் வைத்துள்ள 'கிரெடிட் கார்டின்' தகவல்களை கூறும்படியும் கேட்டார். அதற்கு நிம்மி மறுத்துவிட்டார்.

இந்தநிலையில் அவரது 'கிரெடிட் கார்டு' கணக்கில் இருந்து ரூ.60 ஆயிரம் எடுக்கப்பட்டதாக அவரது செல்போனுக்கு குறுந்தகவல் வந்தது. மர்மநபர்கள் நூதன முறையில் அவரது 'கிரெடிட் கார்டில்' இருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிம்மி, பெரவள்ளூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com