தமிழகத்தில் இன்று 606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழகத்தில் தற்போது 6,708 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று 606 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
Published on

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,01,185 மாதிரிகள் பரிசேதனை செய்யப்பட்டதில், 606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 27,42,216 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 685 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,99,994 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 36,725 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் தற்போது 6,708 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று 165 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்ததாக கோவையில் 87 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 பேர், திருப்பூரில் 42 பேர், ஈரோட்டில் 41 பேர், சேலத்தில் 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com