ஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து 6.16 லட்சம் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தன

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஐதராபாத் மற்றும் புனேவில் இருந்து 6.16 லட்சம் தடுப்பூசிகள் இன்று சென்னை வந்தன
Published on

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2-ம் அலை வேகமாக பரவி கடந்த மாதம் உச்சத்தை தொட்டது. பல்வேறு மாநிலங்களில் கடும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள மக்கள்தொகையில் இதுவரை 9 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தற்போது தடுப்பூசி போட பொதுமக்கள் இடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தடுப்பூசி மையங்களில் குவிந்து வருகிறார்கள். ஆனால் தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்நிலையில், இன்று காலை ஐதராபாத்திலிருந்து புளூ டார்ட் விமானம் மூலம் 24 பார்சல்களில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 20 கோவாக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன. தொடர்ந்து, நண்பகலில் புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 42 பெட்டிகளில் 4 லட்சத்து 97 ஆயிரத்தி 640 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னை உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் பிரித்து அனுப்பப்படுகிறது. தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com