கள்ளக்குறிச்சியில் மின்சாரம் தாக்கி 62 ஆடுகள் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர், விவசாய நிலத்தில் தனது 62 செம்மறி ஆடுகளை அடைத்து வைத்திருந்தபோது, திடீரென கனமழை பெய்தது.
மின்சாரம் தாக்கி 62 ஆடுகள் பலி
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் அடைத்து வைத்திருந்த 62 செம்மறி ஆடுகள் கனமழையின்போது மின்கம்பி அறுந்து விழுந்தததில் மின்சாரம் தாக்கி பலியாகின.

செம்மறி ஆடுகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அசகளத்தூரை சேர்ந்த ஆடு வளர்க்கும் விவசாயி சுந்தர்ராஜ், குரூர் கிராம விவசாய நிலத்தில் தனது 62 செம்மறி ஆடுகளை அடைத்து வைத்திருந்தார்.

மின்சாரம் தாக்கி 62 ஆடுகள் பலி

நேற்று முன்தினம் இரவு காற்றுடன் பெய்த கனமழையில் அங்கு மின்கம்பி அறுந்து ஆடுகள் மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி 62 ஆடுகளும் பலியாகின. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com