

சென்னை,
விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 14-ந்தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. பண்டிகைக்கான ஏற்பாடுகள் களைகட்டி வரும் நிலையில், சனி, ஞாயிறு வார விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர்.
இதனிடையே ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆம்னி பேருந்துகளில் சோதனை நடத்தினர். இதில் கூடுதல் டிக்கெட் கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 639 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் இருந்து ரூ.30.77 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிக கட்டணம் வசூலித்த புகார் தொடர்பாக 11 ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.