அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 64 பேர் அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு

அமோனியா வாயு கசிவால் 15 பேர் உயிரிழந்தனர்.
அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 64 பேர் அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைப்பு
Published on

திருவள்ளூர்,

அமோனியா வாயு கசிவு

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த 'புனித பீட்டர் பால்' என்கிற கடல் உணவு பொருட்களை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த 21-ந்தேதி அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளர்கள் உள்பட 74 பேர் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 2 அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் விமானம் மூலம் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அசாம் அனுப்பி வைப்பு

மீதமுள்ள 5 பேரின் உடல்களும் சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிந்ததும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ளவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்று வந்த தொழிலாளர்களை பேரிடர் மீட்பு குழு அதிகாரிகள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில், இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்து மண்டபத்தில் தங்கி இருந்த 64 பேர் அசாம் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவள்ளூர் தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 64 பேரையும் எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து அசாமிற்கு ரெயில் மூலம் அனுப்பி வைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com