தமிழகத்தில் மேலும் 643 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் புதிதாக 643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 643 பேருக்கு கொரோனா தொற்று..!
Published on

சென்னை,

தமிழகத்தில் இன்று 643 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 23 ஆயிரத்து 214 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 390 பேரும், பெண்கள் 253 பேரும் உள்பட 643 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 107 பேர், கோவையில் 83 பேர், ஈரோட்டில் 59 பேர் உள்பட 37 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. மேலும் இன்றைய நிலவரப்படி 6 ஆயிரத்து 400 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 536 பேரும், கோவையில் 635 பேரும், செங்கல்பட்டில் 380 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் 396 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 874 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com