சேலத்தில் வீடு புகுந்து 65 வயது மூதாட்டி பலாத்காரம்: வாலிபர் கைது

கைதான ரவிக்குமார் மீது ஏற்கனவே மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கு ஒன்று உள்ளது.
சேலத்தில் வீடு புகுந்து 65 வயது மூதாட்டி பலாத்காரம்: வாலிபர் கைது
Published on

சேலம்,

சேலம் கோரிமேடு பகுதியில் 65 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இவர் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து 24 வயதுடைய வாலிபர் ஒருவர் வந்தார். மூதாட்டி வீட்டுக்குள் சென்றதும் அந்த வாலிபரும் அங்கு திடீரென புகுந்தார். இதையடுத்து அவர் மூதாட்டியை கீழே தள்ளி விட்டு பாலியல் பலாத்காரம் செய்தார்.

அப்போது அவரது அலறல் சத்தத்தை கேட்டு அருகில் வசிப்பவர்கள் அங்கு வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் காயம் அடைந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக அம்மாபேட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது கோரிமேடு ஜல்லிக்காடு பகுதியை சேர்ந்த ரவிக்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதில் சம்பவத்தன்று மதுபோதையில் இருந்த ரவிக்குமார் மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்தது தெரிந்தது. மேலும் கைதான ரவிக்குமார் மீது ஏற்கனவே கடந்த 2024-ம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வழக்கும், கன்னங்கு றிச்சி போலீஸ் நிலையத்தில் பதிவாகி நிலுவையில் உள்ளது. இதுதவிர அவர் மீது வழிப்பறி உள்ளிட்ட மேலும் சில வழக்குகளும் உள்ளன. மூதாட்டியை வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com