

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 15.2.2023 முதல் 3.3.2023 வரை முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 12,943 பேர் கலந்து கொண்டனர். அவர்களில் 2,079 பேர் வெற்றி பெற்றனர். இதில் மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட 650 பேர் சென்னையில் 14-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.
அவர்களை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வாழ்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பஸ் மூலம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.