குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்கண்காட்சி இன்று தொடக்கம்

கண்காட்சியில் பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்கண்காட்சி இன்று தொடக்கம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி இந்தாண்டும் கோடை விழாவையொட்டி மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற்றன.

இதனை தொடர்ந்து குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக்கண்காட்சி இன்று தொடங்கியுள்ளது. இந்த பழக்கண்காட்சியில் சுமார் 500 கிலோ எடையில், பேரிச்சம் பழங்களால் உருவாக்கப்பட்ட டைனோசர் உருவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதே போல் வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி உள்ளிட்ட பல்வேறு பழங்களைக் கொண்டு விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனை காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com