6-வது நாள் பஸ் ஸ்டிரைக், சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து

6-வது நாளாக இன்றும் பஸ் ஸ்டிரைக் தொடருகிறது; பொங்கலுக்கான சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. #BusStrike | #TicketBooking | #MRVijayabaskar
6-வது நாள் பஸ் ஸ்டிரைக், சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து
Published on

சென்னை

ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு தடை விதித்தது. மேலும், போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இந்த உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள், நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இருந்தபோதிலும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் தற்காலிக ஓட்டுநர்களால் தற்போது பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 70 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று காலை நிலவரப்படி கன்னியாகுமரில் 865 பேருந்துகளில் 269 பேருந்துகள் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவள்ளூர்-80%, கன்னியாகுமரியில் 60%, புதுக்கோட்டை - 55% அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

கோவையில் 60 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்களின் தேவையை குறைப்பதற்காக சென்னையில் இன்று கூடுதலாக 30 மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் போராட்ட எதிரொலியால், பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 11,12,13 தேதிகளில் 11,983 சிறப்பு பெருந்துகள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று போக்குவரத்து ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்.

#BusStrike | #TicketBooking | #MRVijayabaskar | #Pongal

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com