வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.15 லட்சம் கொள்ளை 7 பேர் கைது

வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து கலகுவாரி அதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை அடித்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.15 லட்சம் கொள்ளை 7 பேர் கைது
Published on

கிணத்துக்கடவு:

கிணத்துக்கடவு காந்திநகர் பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் பஞ்சலிங்கம், இவர் வீட்டிற்கு கடந்த 15-ந்தேதி காரில் வந்த சிலர் வருமான வரி அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் இருந்த 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காசோலைகள் ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

இச்சம்பவம் குறித்து கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் பஞ்சலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராவில் பதிவான காரின் பதிவு எண்ணை கொண்டு கொள்ளையர்களை தேடி வந்தனர்

இந்த நிலையில் நேற்று மாலை கோவை ஈச்சனாரி புறவழிச்சாலை பகுதியில் தனிப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்,

அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் கிணத்துக்கடவில் கல் குவாரி உரிமையாளர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற நபர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கோவை சங்கனூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார்(36) கோவை சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(37), கோவை கணபதி பகுதியை சேர்ந்த மோகன்குமார்(30) ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 3 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தனர் .

மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் விசாரணை நடத்தியதில் பணத்தைக் கொள்ளையடிக்க உதவியாக இருந்த கிணத்துக்கடவு மதுரைவீரன் கோவில் தெருவைச் சேர்ந்த சதீஷ்(36) பேரூர் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி(47), பகவதி பாளையம் பகுதியை சேர்ந்த ஆனந்த்(47) காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்த முக்கியகோவையை சேர்ந்த குற்றவாளிகளான3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com