

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் உயரதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்றும் 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு;
-1.பண்டி கங்காதர் சென்னை கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு இணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், தமிழ் நாடு செய்தித்தாள் நிறுவன தலைமை விஜிலென்ஸ் அதிகாரி யாக மாற்றப்பட்டார்.
-2. திஷா மிட்டல் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பணியாற்றி வந்த இவர், சென்னை மேற்கு சட்டம்-ஒழுங்கு பிரிவு இணை கமிஷனராக பொறுப்பேற்பார்.
3. பகலவன் - காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக பதவியேற்பார்.
4. கபில்குமார் சரத்கர் -தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் தலைமையக கூடுதல் கமிஷனராக பணியாற்றி வரும் இவர், மதுரை போலீஸ் கமிஷனராக மாற்றப்பட்டார்.
5. அபிஷேக் தீட்சித் - மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற் றும் இவர், சென்னை ரெயில்வே போலீஸ் ஐ.ஜி.யாக நியமிக்கப் பட்டுள்ளார். 6. லோகநாதன் - காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் இவர், சென்னை தொழில்நுட்ப பிரிவு ஐ.ஜி.யாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளர். 7. திருநாவுக்கரசு - காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர், நெல்லை சரக டி.ஐ.ஜி.யாக பதவியேற்பார். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.