

தூத்துக்குடி
தூத்துக்குடி ரோச்பார்க் பகுதியில் சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த 7 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமுருகன் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபர்களான தூத்துக்குடி மேலசண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வம்(எ) செல்வசதீஷ் (வயது 26), லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் மகன் மூர்த்தி(26) மற்றும் செல்சீனிகாலனியை சேர்ந்த ஸ்டாலின் மகன் வினோத்(23) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 7 கிலோ கஞ்சா, 3 அரிவாள்கள் மற்றும் கஞ்சா செடிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.