சூப்பர் எல்நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு - ஐகோர்ட்டில் அரசு தகவல்

7 பேர் அடங்கிய குழுவை அமைத்து அரசு கடந்த ஜூலை மாதமே உத்தரவு பிறப்பித்திருந்தது.
சூப்பர் எல்நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு - ஐகோர்ட்டில் அரசு தகவல்
Published on: 

சென்னை,

சூப்பர் எல்நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட்டில் அரசு தகவல் தெரிவித்துள்ளது.

பொதுநல வழக்கு

சூப்பர் எல்நினோ பாதிப்புகளை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் அருளரசு என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

சூப்பர் எல்நினோ

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி. நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், "160 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சூப்பர் எல்நினோ பாதிப்பு தற்போது உருவாகியுள்ளது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை விட, தற்போது பாதிப்பு கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏழை மக்கள் பாதிக்காத வகையில், உணவு தானியங்களை இருப்பு வைப்பது அவசியம். என்பதால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

7 பேர் அடங்கிய குழு

தமிழ்நாடு அரசுத் தரப்பில், "சூப்பர் எல்நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, வறட்சி வெள்ள பாதிப்புகளை சமாளிக்க எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகள் வழங்க நிபுணர்கள் 7 பேர் அடங்கிய குழுவை அமைத்து அரசு கடந்த ஜூலை மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆராய ஏற்கனவே நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனால், வழக்கை முடித்து வைக்கிறோம் என்று உத்தரவிட்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com