துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரி மற்றும் கார்களில் தொடர்கிறது வருமான வரி துறை சோதனை

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரி மற்றும் கார்களில் வருமான வரி துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது.
துரைமுருகனின் வீடு, பள்ளி, கல்லூரி மற்றும் கார்களில் தொடர்கிறது வருமான வரி துறை சோதனை
Published on

வேலூர்,

வேலூர் காட்பாடி காந்தி நகரில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் வருமான வரி துறையினர் இன்று அதிகாலையில் இருந்து சோதனை நடத்தி வருகின்றனர். அவர்களுடன், தேர்தல் பறக்கும் படையும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றது. துரைமுருகனின் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இதேபோன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் 7 பேர் கொண்ட வருமான வரி துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. துரைமுருகனுக்கு செந்தமான பள்ளியில் 3 அதிகாரிகளும், கல்லூரியில் 4 அதிகாரிகளும் சேதனையில் ஈடுபட்டுள்ளனர்

ஏற்கெனவே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தற்போது அவரது மகன் மற்றும் தி.மு.க. சார்பில் வேலூர் மக்களவை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் கதிர் ஆனந்துக்கு சொந்தமான காட்பாடி கிருஸ்தியான்பேட்டையில் உள்ள கல்லூரி மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று வாணியம்பாடியில் உள்ள தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் வீட்டிலும் சோதனை நடந்தது. ஆனால் இதில் எதுவும் சிக்கவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com