பயங்கர ஆயுதங்களுடன் மேலும் 7 வாலிபர்கள் கைது

நெல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் மேலும் 7 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
பயங்கர ஆயுதங்களுடன் மேலும் 7 வாலிபர்கள் கைது
Published on

நெல்லையில் பயங்கர ஆயுதங்களுடன் மேலும் 7 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீசார் ரோந்து

நெல்லை மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பர்வீன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேலநத்தம் ரெயில்வே கேட் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த கும்பலை பிடிக்க சென்றனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓடியது. போலீசார் அதிரடியாக துரத்தி சென்று 2 பேரை பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பாளையங்கோட்டை இலந்தைகுளத்தை சேர்ந்த சிவபெருமாள் (வயது 25), பாளையங்கோட்டை புதுப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த சுடலைமுத்து (25) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தகராறு

அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, செல்போன் செயலி ஒன்றில் குலவணிகர்புரம் ஜெபமாலை மாதாகோவில் தெருவை சேர்ந்த மரியான் மகன் மார்ட்டீன் (20) என்பவர் தன்னை பதிவு செய்து அதன்மூலம் நெல்லை பகுதியை சேர்ந்த பலரிடம் நட்பு ரீதியாக பழகி வந்தார். அவர்களுடன் விளையாடுவது, அரட்டை அடிப்பது என்று இருந்தார்.

இந்த நிலையில் மார்ட்டீனுக்கும், மணிகண்டன் என்பவருக்கும் விளையாடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் மணிகண்டனை அடித்து காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் மார்ட்டீன் தனது நண்பர்களுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.

7 பேர் கைது

இதையடுத்து போலீசார், மார்ட்டீன், அவரது நண்பர்களான பாளையங்கோட்டை திருஞானசம்பந்தர் தெருவை சேர்ந்த நம்பிராஜன் (20), குலவணிகர்புரத்தை சேர்ந்த ஈசுவரன் (19), மகேஷ் (19), பாளையங்கோட்டை கதிர்வேல் (19), சமாதானபுரத்தை சேர்ந்த விக்னேஷ்குமார் (20), வி.எம்.சத்திரத்தை சேர்ந்த கிஷோர்குமார் (20) ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மணிகண்டனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com