வீடு புகுந்து கானா பாடகர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது

இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வீடு புகுந்து கானா பாடகர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கு: 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது
Published on

சென்னை,

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே ஒரத்தூர் ஊராட்சியில் உள்ள உள்ள அம்மணம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 42). டிரைவர் இவருடைய மகன் லோகேஷின் நண்பர்கள் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார் (22), சீனிவாசன் (23).

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் லோகேஷின் வீட்டில் தங்கியிருந்தபோது 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கி ளில் வந்து சரமாரியாக சீனிவாசன் மற்றும் பரத்குமாரை வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் குற்றவாளிகள் பதுங்கி உள்ளார்களா? என தனிப்படை போலீசார் வலைவீசி குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், வீடு புகுந்து கானா பாடகர்கள் 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தோஷ் (23), கலைச்செல்வன் (20), ஐயப்பன் (26), குமரவேல் (20), வேலன் (19) மற்றும் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com